அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த நான்கு மாடுகள் உயிரிழப்பு.. கதறி அழுத உரிமையாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த நான்கு பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி கிராமத்தில் மகிமலை ஆற்றின் ஓரம் இன்று மேய்ச்சலுக்காக சென்ற நான்கு பசுமாடுகள் மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தது. இப்பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான மரத்தை வெட்டும் போது அவ்வழியே செல்லும் மின்கம்பியில் மரம் விழுந்து அறுந்துள்ளது.


Advertisement

image
இதனை அறியாமல் மரத்தை வெட்டியவர்கள் இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்காமல் சென்று விட்டனர். இந்நிலையில் திருவிடைக்கழி கிராமத்தை சேர்ந்த அவையம்பாள் மற்றும் அமுதா ஆகியோருக்கு சொந்தமான நான்கு மாடுகள் ஆற்றின் கரையோரம் உள்ள வயலில் வெளியில் மேய்ந்துள்ளது.

image
அப்போது மரம் விழுந்து அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த நான்கு மாடுகளும் அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. நான்கு மாடுகளின் மொத்த மதிப்பு சுமார் இரண்டு லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மின்வாரியம் கொடுத்த புகாரின் பேரில் தரங்கம்பாடி வட்டாட்சியர் கோமதி மற்றும் பொறையார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாடுகளை இழந்த அதன் உரிமையாளர்கள் கதறி அழுதனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement