கொரோனா பாஸிட்டிவ் என்ற அதிர்ச்சியால் தூக்கிட்டுக் கொண்ட 82 வயது முதியவர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா முழுவதும் கொரோனா பயத்தால் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிற செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என்ற முடிவு வந்த ஒருநாள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவின் பாராசத்தில் 82 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டார். முன்னாள் அரசாங்க அதிகாரியான இவர் பல மாதங்களாகவே மன அதிர்ச்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.


Advertisement

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான அறிக்கைப்படி, 82 வயதான நிரஞ்சன் சௌத்ரி என்பவர் நபபள்ளியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுக்கொண்ட நிலையில், போலீஸாரால் மீட்கப்பட்டார். உலகெங்கிலும் கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருக்கிறனர்.

சௌத்ரிக்கு வயது தொடர்பான நோய்கள் இருந்திருக்கிறது. ஆனால் கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. வியாழக்கிழமை லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வரை ஜெசோர் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு கொரோனா சோதனை செய்ததில் பாஸிட்டிவ் என முடிவு வந்தது. அதை கேட்டு மனமுடைந்துள்ளார். ஆனால் அவர் குணமடைவார் என அவர் குடும்பத்தினர் நம்ப வைக்க முயன்றுள்ளனர்.


Advertisement

image

ஏற்கனவே சௌத்ரி கொரோனா பயத்தில் இருந்ததாகவும், வீட்டைவிட்டு யாரையும் வெளியேற விடவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கே தொற்று உறுதியான நிலையில், அவருடைய உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. இதுவரை 1,16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 86,000க்கும் அதிகமானோர் மீண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement