ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வை அறிவித்தது ஏன் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்
கடந்த 15ம் தேதி மாலை 7.29 மணிக்கு ஒரு ஹிந்தி பாடல் மூலம் தன்னுடைய ஓய்வை அறிவித்தார் தோனி. இதனை எதிர்பார்க்காத
கிரிக்கெட் உலகம் அதிர்ச்சிக்கு உள்ளானது. தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே
தான்னுடைய ஓய்வை அறிவித்தார் 33 வயதேயான சுரேஷ் ரெய்னா.
தல, சின்னத்தல என அன்புடன் அழைக்கப்படும் இருவருமே அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். ஓய்வை அறிவித்த நேரம் அவர்கள்
சென்னையில் பயிற்சியில் இருந்தனர். பயிற்சியை முடித்துக்கொண்டு ஓய்வு அறையில் தோனியைக் கட்டிப்பிடித்து ரெய்னா தன் அன்பை
வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்தி நாளிதழ் ஒன்றுக்கு பேசிய ரெய்னா தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்பது தனக்கு முன்பே தெரியும் என்றும் தானும் அதற்கு தயாராக இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆகஸ்ட் 15ம் தேதியை ஏன் தேர்வு செய்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தோனியின் ஜெர்சி நம்பர் 7. என்னுடைய ஜெர்சி நம்பர் 3. இரண்டையும் சேர்த்தால் 73. அன்றைய தினம் இந்தியா தனது 73வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அதனால் ஓய்வை அறிவிக்க இதைவிட சிறந்த நாள் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!