கடந்த 15ம் தேதி மாலை 7.28 மணி வரை அமைதியாக இருந்த கிரிக்கெட் உலகம் 7.29 மணியில் இருந்து பரபரப்பானது. ஒரு ஹிந்தி பாடல் மூலம் தன்னுடைய ஓய்வை மிகச்சாதரணமாக அறிவித்தார் தோனி. இதனை எதிர்பார்க்காத கிரிக்கெட் உலகம் அதிர்ச்சிக்கு உள்ளானது. அந்த அதிர்ச்சிக்கு மேல் அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது.
தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய ஓய்வை அறிவித்தார் 33 வயதேயான சுரேஷ் ரெய்னா. இந்தியாவுக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,787 ரன்களை குவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. மேலும் கிரிக்கெட்டின் அனைத்து பார்மட்டுகளிலும் சதமடித்தவர் சுரேஷ் ரெய்னா.
தல, சின்னத்தல என அன்புடன் அழைக்கப்படும் இருவருமே அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். ஓய்வை அறிவித்த நேரம்
அவர்கள் சென்னையில் பயிற்சியில் இருந்தனர். பயிற்சியை முடித்துக்கொண்டு ஓய்வு அறையில் தோனியைக் கட்டிப்பிடித்து ரெய்னா தன்
அன்பை வெளிப்படுத்தினார். அது தொடர்பான வீடியோவையும் சிஎஸ்கே வெளியிட்டது. இந்நிலையில் ஓய்வு அறிவித்த நேரம் குறித்து
ரெய்னா பேசியுள்ளார்.
சென்னை வந்ததும் தோனி தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என எனக்குத் தெரியும். எனவே நானும் தயாராகத் தான்
இருந்தேன். நான், ப்யூஷ் சாவ்லா, தீபக் சாஹர்,கார்ன் சர்மா ஆகியோர் விமானம் மூலம் 14ம் தேதி ராஞ்சி சென்றோம். அங்கு தோனி மற்றும் மோனு சிங்கை அழைத்துக்கொண்டு சென்னை வந்தோம். எங்களது ஓய்வை அறிவித்த பிறகு நாங்கள் ஆரத்தழுவிக் கொண்டோம், நிறைய அழுதோம். நான், ப்யூஷ் சாவ்லா, அம்பதி ராயுடு, கேதர் சாதவ், கார்ன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து எங்களது நட்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசிக்கொண்டு இருந்தோம். எனத் தெரிவித்துள்ளார்.
நீங்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த கணம் எவ்வளவு கண்ணீரை நீங்கள் கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என
எனக்குத் தெரியும் என தோனியின் மனைவி சாக்ஷி உருக்கமாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்