[X] Close

2021 சட்டசபை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எதிர்வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

image

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அ.தி.மு.கவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க வின் மூத்த தலைவர்கள் அவர்களது மாறுபட்ட கருத்தை முன்வைப்பதே இதற்கு காரணம்.  தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்களின் கருத்துக்கு கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார் என சொல்லப்படுகின்ற சூழல் இருந்தாலும் ஆளும் அ.தி.மு.க, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நியமிக்க வாய்ப்புள்ளதாகவே சொல்லப்படுகிறது.


Advertisement

image

கட்சி உறுப்பினர்களுக்கிடையே உள்ள மாற்று கருத்துகள் சரி செய்யப்பட்டவுடன் அடுத்து வரும் பதினைந்து நாட்களுக்குள் ஒரு அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர்கள் ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு தகவல் கொடுத்ததாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் சில நிபந்தனைகளும் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க -வின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி விரைவில் இது தொடர்பான அறிவிப்பை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.


Advertisement

Courtesy: https://timesofindia.indiatimes.com/city/chennai/ops-likely-to-agree-to-eps-standing-as-cm-candidate-for-2021-polls-soon/articleshow/77579736.cms

loading...

Advertisement

Advertisement

Advertisement