[X] Close

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த 4 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை தெப்பக்குளம் காவல் உதவி ஆய்வாளர் மதுரை வீரன் நேற்று காமராஜர் சாலை வைகை தென்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இருந்தது தெரிய வந்தது. 


Advertisement

image
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் காமராஜபுரம் வ.உ.சி தெருவை சேர்ந்த வாசுதேவன் (வயது 23), கல்மேடு எம்ஜிஆர் நகர் அருள்முருகன் (வயது 25), சிலைமான் பள்ளிவாசல் தெரு முகமது அசாருதீன் (வயசு 26), கல்மேடு களஞ்சியம் நகர் வேலுச்சாமி (வயது 55) என்பது தெரியவந்தது.

image
இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் அவர்கள் வந்த ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
loading...
Related Tags : மதுரைMadurai

Advertisement

Advertisement

Advertisement