"யாரும் கோரவில்லை என்றால் மட்டும் ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப்"-பாபா ராம்தேவ் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடப்பாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு வேறு நிறுவனம் முன்வரவில்லை என்றால் மட்டுமே பதஞ்சலி முன் வரும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து விவோ நிறுவனம் விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டைட்டில் ஸ்பான்ஸர்களை பிசிசிஐ தேடுவதாக செய்திகள் வெளியானது.

image


Advertisement

இதனிடையே ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்கும் ஆன்லைன் கல்வி செயலியான "பைஜூஸ்" நிறுவனத்திற்கும், குளிர்பான நிறுவனமான கொகோ கோலாவுக்கும் போட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து "ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க விரும்புகிறோம்" என்று பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திஜார்வாலா அண்மையில் தெரிவித்தார்.

image

இந்நிலையில் யோகா குரு பாபா ராம் தேவ் கூறுகையில் "வேறு இந்திய நிறுவனங்கள் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை கோரவில்லை என்றால் மட்டும் பதஞ்சலி முன் வரும். சீன நிறுவனங்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிப்பதை ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன். இதுவரை ஐபிஎல் ஸ்பான்ஸருக்காக முறைப்படி பிசிசிஐயிடம் எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை" என்றார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement