[X] Close >

தமிழிலும் ரயில் டிக்கெட்

Train-ticket-comes-in-tamil

தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியைத் தொடர்ந்து தமிழ் மொழியும் இடம்பெற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 


Advertisement

பயணிகள் வசதிக்காக ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளும் இடம்பெற வேண்டும் என்று ரயில்வே பயணிகள் நலச்சங்கம் ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தது. பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையிலான தேசிய ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தின் கோரிக்கையை கோரிக்கையை ரயில்வே வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியைத் தொடர்ந்து தமிழும் இடம்பெற உள்ளது. ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழியும் இடம்பெறும் திட்டம் அடுத்தாண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close