சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா... ஓராண்டு தேடுதலுக்குப் பின் கைது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஓராண்டாக தலைமறைவாக இருந்த சிறுமியின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

தஞ்சை மாவட்டம் பூதலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி மகள் மற்றும் மனைவியின் தங்கை கணவர் கோபிநாத் உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து தங்கி இருந்தனர்.

image
இதனிடையே, சரவணனின் 13வது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோபிநாத் மீது சரவணனின் மனைவி புவனேஸ்வரி திருவையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்த வழக்கு நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த கோபிநாத்தை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கோபிநாத் சொந்த ஊரில் இருப்பதாக பொலீசாருக்கு தகவல் கிடைத்தது.


Advertisement

image
இதனையடுத்து, நாகை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வேம்பு தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த கோபிநாத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோபிநாத் நாகை போக்சோ  நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, மயிலாடுதுறை சிறையில் அடைக்கப்பட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement