அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இளைய சகோதரர் காலமானார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இளைய சகோதரர் காலமானார்.


Advertisement

அமெரிக்காவின் நியூயார்கில் உள்ள கார்னெல் மருத்துவமனையில் உடல்நலக் கோளாறால் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரர் ராபர்ட் ட்ரம்பை,  அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

image


Advertisement

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் சந்தித்து சென்ற அடுத்த நாளே அவரது சகோதரர் ராபர்ட் டிரம்ப் உயிரிழந்துள்ளார். இதனை அதிபர் டொனால்ட் ட்ரம்பே உறுதி செய்துள்ளார். 

"எனதருமை சகோதரர் ராபர்ட் இன்று இரவு பூவுலகை விட்டு மறைந்தார் என்பதை கணத்த இதயத்தோடு நான் பகிர்ந்து கொள்கிறேன். அவர் என்னைவிட வயதில் இளையவராக இருந்தாலும் எனது சிறந்த நண்பராக இருந்தார். அவரை நான் மிஸ் செய்கிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம். என்றென்றும் அவரது நினைவுகள் என் நெஞ்சிலிருந்து நீங்காதவை. லவ் யூ ராபர்ட். RIP’ அதிபர் டிரம்ப் என தெரிவித்துள்ளார்.

image


Advertisement

72 வயதான ராபர்ட் டிரம்ப் பல துறைகளில் முதலீடு செய்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இறுதிச் சடங்களில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement