ஊரடங்கு காலம்… ஆன்லைன் வகுப்புகள்… மனச்சோர்வு…. கல்லூரி மாணவர்கள் மனநலம் காப்பது எப்படி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிப்புகளால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். தினமும் பல மணி நேர ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் என நாட்கள் நகருகின்றன. ஆனால் சுதந்திரமாக வெளியில் செல்லமுடியாமல், நண்பர்களுடன் பழகமுடியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். சமூகத் தொடர்பில்லாத நிலையில், மனச்சோர்வும் அதையடுத்த உடல் சோர்வும் அவர்களுக்கு ஏற்படுகின்றன. இவற்றில் இருந்து விடுபடுவது பற்றிய மனநலத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் மனநல ஆலோசகர் பிரீத்தி பாலாஜி.


Advertisement

image

இந்தியா முழுவதும் 61 சதவீத மக்களின் மனநலம் கொரோனா காரணமாக பாதிப்படைந்திருக்கிறது என்று தி மேவரிக்ஸ் இந்தியா அமைப்பு நடத்திய ஏப்ரல் - மே 2020 ஆய்வில் தெரியவந்துள்ளது. பலதரப்பட்ட வயதினரும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க பிரிவினராக 18 முதல் 25 வயதிற்குட்ப்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். எனவே கல்லூரி மாணவர்கள், தங்கள் மனநலத்தை எப்படிப் பாதுகாக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்வது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது.


Advertisement

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்  (குறள்: 623 )

இடையூறுகள் வந்தபோதும் அதற்காக மனத்தெளிவு கொண்டவர்கள் துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்கி, அதனைப் போக்கிவிடுவர் என்பதுதான் அதற்கான பொருள். இந்தக் குறளைப் பின்பற்றினாலே நம்முடைய பாதிப் பிரச்னைகள் நீங்கிவிடும்.

image


Advertisement

(மனநல ஆலோசகர் பிரீத்தி பாலாஜி) 

என்ன நடந்துகொண்டிருக்கிறது?

கொரோனா தொற்றை ஒழிக்க அனைத்துத் தரப்பில் இருந்தும் கடுமையான பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக விலகல், தனிமைப்படுத்துதல், பள்ளி கல்லூரிகள் மூடல், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மாணவர்கள், விடுதி வளாகங்கள் மூடல், சக மாணவர்களுடன் பேசிப் பழகமுடியாத சூழல், நேரடி வகுப்புகளுக்குப் பதில் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள், தினசரி வாழ்வில் மிகப்பெரிய மாற்றம், இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய பட்டமளிப்பு விழா, எதிர்காலத்தைப் பற்றிய பயம், விழாக்கள் ரத்து என நீள்கிறது பட்டியல்.

இதனால் மாணவர்களின் மனநலம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. நெருங்கிய நண்பர்களின் சந்திப்புக்கும், அடிக்கடி வெளியில் செல்வதற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது மாணவப் பருவம். இந்தத் தொற்று மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாறியிருப்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

image

மன ஆரோக்கியத்தின் பாதிப்பு
பயம், கட்டுப்பாடு இழப்பு, சலிப்பு, எதிலும் ஆர்வமில்லாமை, தனிமை, மனச்சோர்வு, ஆபத்தான செயல்களில் ஈடுபடுதல், எலெக்ட்ரானிக் சாதனங்களின் அடிமை என இவற்றால் பாதிக்கப்பட்டு, எதிர்வினைகள் அதிகமாகி மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

என்ன செய்யலாம்?
மாணவர்கள் கடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அசாதாரண சூழல் விளைவாக ஏற்படும் மனஅழுத்தம் இயல்பானதுதான் என்பதை உணரவேண்டும். இதற்காக மாணவர்கள், தங்களை தரக்குறைவாக நினைப்பதோ அல்லது மோசமான மனநிலையைக் கண்டு வெட்கப்படவோ தேவையில்லை. நமக்குத் தேவை தெளிவு மட்டுமே.

இந்த மனச்சுமை அல்லது மனப்பாதிப்பு உங்களையும், மற்றவர்களையும், உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் பெரும் ஆபத்தில் சேர்த்துவிடக்கூடாது என்பதில் மாணவர்கள் அதிக கவனம்கொள்ளவேண்டும்.

image

என்ன செய்யலாம்?
இந்தக் காலகட்டம் தற்காலிகமானதுதான் என்பது உங்களுக்குள் உரக்கச்சொல்லுங்கள். அதை முழுமையாக உணருங்கள். மனநலத்தைப் பாதுகாத்துக்கொள்ள கோப்பிங் மெக்கானிசம் என்று சொல்லக்கூடிய சமாளிக்கும் உத்திகளைக் கையாள்வதன் மூலம், மாத்திரை மருந்துகள் இல்லாமல் இயற்கையாகவே பாதுகாத்துக் கொள்ளலாம்.

அன்றாடைப் பணிகளை கடைப்பிடித்தல்,
நல்ல தூக்கம்,
மற்றவர்களுடன் தொடர்பு,
ஓய்வு எடுத்துக்கொள்ளுதல்

இந்த நான்கையும் செய்யும்போது நல்ல மனநலத்துக்கு வேண்டிய இயற்கையாக மூளைக்குத் தேவைப்படும் வேதிப்பொருள்களை உருவாக்கலாம்.

டோஃபாமைன் – வெகுமதி தரக்கூடிய வேதிப்பொருள். தினமும் உங்களுக்குப் பிடித்த வேலைகளை எடுத்துச்செய்யலாம். பாட்டுப் பாடலாம், மற்றவர்களுக்கு உதவி செய்வது, புத்தகம் வாசிப்பது, தன்னார்வலராக இருப்பது, இசை கேட்பது, வரைவது, ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவது, சின்னச் சின்ன விஷயங்களையும் கொண்டாடுவது.

image

ஆக்சிடோசின் – அன்பைச் சுரக்கவைக்கும் வேதிப்பொருள். செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது, மனசுக்குப் பிடித்தவர்களுடன் அன்பாக நேரத்தைச் செலவிடுவது, மற்றவர்களை வாழ்த்துவது என இனிய செயல்களைச் செய்யவேண்டும்.

செரோடோட்டின் – நல்ல அளவான நிம்மதியான உறக்கம், ஓமேகா டி பேட்டியாசிஸ் உள்ள உணவுகளை உண்பது, இதமான சூரியவெளிச்சம், அழுத்தம் உருவாக்கும் மனசுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும்.

என்டார்ப்பில் - வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். வாய்விட்டுச் சிரிப்பதன் மூலம் என்டார்ப்பில்லை உற்பத்தி செய்யலாம். நல்ல நகைச்சுவைகளைப் பரிமாறிக்கொள்வது, தியானம், யோகா, மிதமான உடற்பயிற்சியின் மூலம் இந்த வேதிப்பொருளை அதிகம் சுரக்கச் செய்யலாம்.

image

பெற்றோர்களின் கவனத்திற்கு…
பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். பொறுமை, கனிவு, அளவான அறிவுரை, அவர்களுக்கான பிரைவஸி நேரமும் முக்கியம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். “எதற்கும் கவலை வேண்டாம். உனக்காக எப்போதும் நாங்கள் இருக்கிறோம்” என்ற நம்பிக்கை வார்த்தைகள் மிக முக்கியம். அதிக நேரம் ஆன்லைனில் இருக்கும் பிள்ளைகளுக்கு மனச்சோர்வும் உடல் சோர்வும் ஏற்படும் என்பதை எதார்த்தமாக புரியவைத்து அவர்களுடன் மனந்திறந்து பேசி ரிலாக்ஸ் செய்யுங்கள்.

ஹெல்ப்லைன்
உடல்நலமும் மனநலமும் ஒன்றையொன்றுப் பின்னிப்பிணைந்தவை. மனநலத்தைப் பேணிக்காணிக்க ஆன்லைன் கவுன்சலிங் மையங்கள், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் இருக்கின்றன. தேவையான தருணத்தில் பயன்படுத்தி, உங்கள் மனநிலையைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

நிம்ஹான்ஸ் (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மென்டல் ஹெல்த் மற்றும் நியூரோசயின்சஸ்): 080 46110007
சிநேகா ஹெல்ப்லைன்: +9144 24640050/60

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement