இன்று லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83.75 : மற்றவை ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நீண்ட நாட்களாவே பெட்ரோல் ரூ.80க்கும் மேல் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. நேற்று ரூ.83.72க்கு பெட்ரோல் விற்பனையான நிலையில், இன்று 3 பைசா உயர்ந்து ரூ.83.75க்கு விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மதிப்பீட்டில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளால் இந்த விலை நிலவரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் வரும் காலங்களில் பெட்ரோல் விலை குறையும் எனக் கூறப்படுகிறது.

image


Advertisement

டீசல் விலை இன்று 8 பைசா குறைந்து ரூ.78.86க்கு விற்கப்படுகிறது. மானியமில்லா சிலிண்டரின் விலை இந்த மாதம் ரூ.610.50க்கு விற்கப்படுகிறது. இதுதவிர வாகனங்களுக்கு விற்கப்படும் கேஸ் கிலோ ரூ.35.44 ஆக உள்ளது.

image

இதற்கிடையே இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை கிராம் ரூ.5,125 ஆகவும், வெள்ளி கிராம் ரூ.67 ஆகவும் விற்கப்படுகிறது. இந்தியாவிற்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.74.9 ஆக உள்ளது. பங்குசந்தை மதிப்புகளை பொருத்தவரை சென்செக்ஸ் 433.15 புள்ளிகள் குறைந்து 37,877.34 ஆகவும், நிஃப்டி 122.05 புள்ளிகள் குறைந்து 11,178.40 ஆகவும் இருக்கின்றன.


Advertisement

பிரதமரை தவிர எல்லோரும் ராணுவத்தின் திறனையும் வீரத்தையும் நம்புகிறார்கள்: ராகுல்காந்தி

loading...

Advertisement

Advertisement

Advertisement