கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த தலை - பழிக்குப் பழியா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே உள்ள பாதுகாப்பு கம்பியில் மாதவன் என்பவரது தலை மட்டும் தனியாக இருந்ததைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 


Advertisement

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர் ஆகாஷ் என்பவரும், அருகில் உள்ள தெருவில் மேலும் இருவரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அப்போது இந்தக் கொலை தொடர்பாக போலீசார் 11 நபர்களை கைது செய்தனர்.

image


Advertisement

இந்நிலையில் இன்று ஆகாஷ் கொல்லப்பட்ட அதே இடத்தில் மாதவன் என்பவரது தலை மட்டும் தனியாக இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர் மாதவனின் உடலை தேடும் பணியை தொடங்கினர். அப்போது ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கும்மிடிப்பூண்டி தைலம் தோட்டத்தில் கால்களில் உள்ள பாதங்கள் மற்றும் தலை வெட்டப்பட்ட நிலையில் மாதவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

image

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்ட  மாதவன், 2019 ஆம் ஆண்டு மூன்று பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 11 நபர்களில் ஒருவர் என்பதும் இவர் ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.   


Advertisement

ஆகாஷ் கொலைச் செய்யப்பட்ட அதே இடத்தில் மாதவனின் தலை இருந்ததால் ஆகாஷின் உறவினர்கள் இக்கொலையை செய்திருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement