தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களது முதல் நாள் பயிற்சியை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கினர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தோனி புறப்பட்டு நேற்று மாலை சென்னை வந்தார். மேலும், சுரேஷ ரெய்னா. கரண் சர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோர் சென்னையில் ஒருவாரம் பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர். அவர்களும் நேற்று சென்னை வந்தனர். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து அனைத்து அணிகளும் அதற்கான பயிற்சிகளை தொடங்க இருக்கின்றன. சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே அதாவது இந்த மாதமே துபாய் புறப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தோனி தலைமயிலான சிஎஸ்கே வீரர்கள் இன்று முதல் நாள் பயிற்சியை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி மேற்பார்வையில் பயிற்ச்சி நடைபெறுகிறது. சென்னை அணியை சேர்ந்த தோனி, ரெய்னா, கேதர் ஜாதவ், ஹர்பஜன் உள்ளிட்ட 15 வீரர்கள் இந்தப் பங்கேற்றுள்ளனர்.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’