15 வருடங்களில் மெஸ்ஸி, ரொனால்டோ இல்லாமல் சாம்பியன் லீக் அரையிறுதி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கால்பந்து போட்டிகளில் அடுத்ததாக நடக்க இருக்கும் சாம்பியன் லீக் சுற்றில் பிரபல கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டோனா ரொனால்டாவும் பங்கேற்க போவதில்லை என்பது கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

image

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸியின் பார்சிலோனோ அணியும், பேயர்ன் முனிச் அணியும் மோதியது. இதில் பேயர்ன் முனிச் அணியானது பார்சிலோனோவை 8- 2 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதே போல ரொனால்டாவின் ஜுவென்டஸ் அணியையும் 16 சுற்றில் லையன் அணி வீழ்த்தியது. இதனால் அடுத்ததாக நடக்க இருக்கும், சாம்பியன் லீக் அரையிறுதி சுற்றில் கால்பந்து உலகில் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸியும், ரொனால்டாவும் இடம்பெற போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.


Advertisement

 கடந்த வருடங்களில் சாம்பியன் லீக் சுற்று போட்டிகளில் பங்கேற்ற மெஸ்ஸி பார்சிலோனோ அணி சார்பாக விளையாடி 4 முறை கோப்பையை வென்றுள்ளார். ரோனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஒரு முறையும், ரியல் மாட்ரிட் அணிக்காக நான்கு முறை விளையாடி கோப்பையை வென்றுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸியும் ரோனால்டாவும் சாம்பியன் லீக் அரையிறுதி போட்டிகளில் பங்கேற்காதது அவர்களது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement