உறவு கசந்துப்போவதற்கு முன்பு ஏன் புகார் கொடுக்கவில்லை என்று வழக்குத் தொடர்ந்த பெண்ணை கேள்வி கேட்டு பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞரை விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 7 ஆம் தேதி மும்பை காவல்துறையின் சைபர் பிரிவுக்கு பெண் ஒருவர் புகாரளித்தார். அதில் கல்லூரியில் தனக்கும் 18 வயது இளைஞர் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து இருவரும் வீட்டுக்கு வந்துப்போகும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒருமுறை தன்னுடைய விருப்பம் இல்லாமல் அந்த இளைஞர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அது குறித்து நான் புகாரளிக்கவில்லை என தெரிவித்திருந்தார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகதொடர்பான விசாரணையில் அந்தப் பெண்ணுக்கும் இளைஞருக்கும் காதல் உறவு நன்றாக இருந்த வரை அந்தப் பெண் புகார் எதையும் கொடுக்கவில்லை. ஆனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தப் பின்பு இம்மாதம் ஜூலையில் அந்தப் பெண் புகாரளித்துள்ளார். மேலும் அந்தப் புகாரில் பெண்ணின் அம்மாவுக்கு தாங்கள் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார். அதனடிப்படையில் இளைஞரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய நீதிபதி பாரதி தாங்கரே "இப்போதுள்ள இளைஞர்களுக்கு அனைத்திலும் வேகம் தேவைப்படுகிறது. அதன் விளைவே இதுபோன்ற வழக்குகள். பக்குவமின்மை காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்தச் சம்பவத்தில் உடல்ரீதியான பாதிப்புகள் மட்டும் பதிவாகியுள்ளது. இருவரும் வயதுக்கு மீறிய வேகத்தை காட்டியுள்ளனர். இருவருக்கும் இருந்த உறவு கசந்துப்போன பின்பே, இதுபோன்ற புகார்கள் பதிவாகின்றது. இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போக்ஸோவில் கைது செய்யலாம். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?