‘யார் முதல்வர் வேட்பாளர்?’ -ஓபிஎஸ் இல்லத்தில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதல்வர் வேட்பாளர் யார் என்று சர்ச்சை எழுந்த நிலையில், ஓபிஎஸ் இல்லத்தில் பத்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்டோர் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். துணை முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

image


Advertisement

அதிமுகவில் யார் அடுத்த முதல்வர் என்பது குறித்த சர்ச்சை நீடித்து வருகிறது. அமைச்சர்கள் தங்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் கட்சி அறிவிக்கும் எனக்கூறி முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. மேலும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அடுத்த முதல்வராக, நிரந்தர முதல்வராக ஓ,பன்னீர்செல்வம் தான் வருவார் என்று தேனி மாவட்டம் முழுவதும் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement