[X] Close

“ஓபிஎஸ்தான் அடுத்த முதல்வர்” - தேனியில் பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தின் அடுத்த நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளை செயல்படுத்துவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே அதிமுகவில் யார் அடுத்த முதல்வர் என்பது குறித்த சர்ச்சை நீடித்து வருகிறது. அமைச்சர்கள் தங்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் கட்சி அறிவிக்கும் எனக்கூறி முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.


Advertisement

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக ...

இந்த சூழ்நிலையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அடுத்த முதல்வராக, நிரந்தர முதல்வராக ஓ பன்னீர்செல்வம் தான் வருவார் என்று தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவை பெற்ற ஒரே அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும் அவர்தான், தமிழக நிரந்தர முதல்வர் என்றும் போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் குறிப்பாக கொஞ்சம் பட்டி கிராம மக்கள் தங்களது ஆதரவை போஸ்டர் ஒட்டி வெளிப்படுத்தியுள்ளனர்.


Advertisement

image

இதுபோன்று தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டி வருவதால் தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement