சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா தங்கியுள்ள வீட்டிற்கு சுஷாந்தின் வங்கிக்கணக்கில் இருந்து மாத தவணை சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரது தற்கொலை தொடர்பான வழக்கை போலீஸ் விசாரித்து வருகிறது. இதேபோல், சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில், அவரது காதலியான ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், அவரது மேலாளர் சாமுவேல் மிரான்டா, ஸ்ருதி மோடி ஆகிய 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. பல கோணங்களில் பலரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சுஷாந்தின் வங்கி பரிவர்த்தனைகளும் விசாரணையின் கீழ் வந்துள்ளன.
இதில் சுஷாந்தின் முன்னாள் காதலியும், தோழியுமான அங்கிதா பெயரும் இணைந்துள்ளது. அங்கிதா தற்போது தங்கி வரும் வீடானது சுஷாந்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த வீட்டிற்கான மாத தவணை சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டின் மதிப்பு சுமார் 4.5 கோடி ஆகும்.
சுஷாந்தின் வங்கி விவரங்களை ஆய்வு செய்தபோது இது தெரிய வந்ததாகவும், மேற்கொண்டு ஏதேனும் பண பரிவர்த்தனை அங்கிதாவுடன் நடந்துள்ளதா என விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே தான் தங்கியுள்ள வீட்டிற்கு தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்தே பணம் எடுக்கப்பட்டது என்றும், அதற்கான வங்கி பரிவர்த்தனை நகலையும் அங்கிதா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
Loading More post
"அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்" - அமமுக பொதுக்குழு தீர்மானம்
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!