[X] Close

முதலில் நம்ப வைப்பது.. பின்னர் கைவரிசை - நகைக்கடை உரிமையாளரிடம் நூதன முறையில் மோசடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் நகை கடை உரிமையாளரிடம் 76 சவரன் நகை மோசடி - காவல்துறையினர் விசாரணை.


Advertisement

image

மதுரை கான்சா மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவார் நகை வியாபாரி சண்முகம். இவர் அதே பகுதியில் சொந்தமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த வியாபார நகைக்கடை நடத்தி வருகின்றார். அவருக்குத் தெரிந்த பாபு என்ற நகை செய்யும் ஆசாரி மூலமாக செந்தில் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். இவர் சண்முகத்திடம் இரண்டு முறை சிறிய அளவில் நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.


Advertisement

நகை வாங்கியதற்கான பணத்தை அவ்வப்போதே சரியான முறையில் கொடுத்துள்ளார். பின்னர் தனக்கு, ஒரு கடைக்கு நகை கொடுக்கும் பெரிய ஆர்டர் வந்திருப்பதாகவும், அதனால் 75 சவரன் நகை கொடுத்து உதவும்படியும் சண்முகத்திடம் கேட்டுள்ளார்.

image
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக நகைகளை வாங்கி சரியாக பணத்தை கொடுத்த நம்பிக்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 76 சவரன் நகையை கொடுத்துள்ளார்.

நகையை வாங்கிச் சென்றவர் பல நாட்களாகியும் நகையை திருப்பித்தராமல் பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை. இந்த நிலையில் அவரைப் பற்றி விசாரித்த போது அவர் நகைக்கடை நடத்தும் தனது மாமனார் செல்வராஜ் உடன் இணைந்து பல இடங்களில் நகைகளை வாங்கி ஏமாற்றி உள்ளதும், இவர்களின் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் அவருக்கு தெரிய வந்துள்ளது.


Advertisement

image
இச்சம்பவம் குறித்து தெற்குவாசல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement