"என்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்யுங்கள்" எஸ்பிபிக்காக ஏ.ஆர்.ரகுமான் ட்வீ்ட் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் செய்துள்ளார்.


Advertisement

image

பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் கவலைக்கிடமான நிலையில் ஐசியு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

 இதனையடுத்து பல பிரபலங்கள் பாடகர் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "எஸ்பிபி என்கின்ற சாதனையாளர் விரைவில் குணமடைய இசைப் பிரியர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்யுங்கள். அவர் தன்னுடைய அபாரமான குரல்வளத்தால் நிறைய நமக்காக செய்திருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement