அதிமுக தலைமையிலான கூட்டணி இன்று பாஜக இருக்கிறது, ஆனால் நாளை இது மாறலாம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போது அரசியல் ஆட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் ? அதிமுக தலையில் கூட்டணியா ? இல்லை பாஜக தலைமையில் கூட்டணி ? அதிமுக - திமுக இடையே போட்டியா ? அல்லது பாஜக - திமுக இடையே போட்டியா ? என பல கருத்துகளும், விவாதங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் பாஜக மாநிலத் துணை துணைத் தலைவர் வி.பி துரைசாமி கூறும்போது, பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும், பாஜக - திமுக இடையே தான் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டி எனவும் கூறியிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த எல்.முருகன், அதிமுகவுன் பாஜக இன்னும் கூட்டணியில் தான் இருக்கிறது என்பதை உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்துள்ள எல்.முருகன், “தமிழகத்தில் அதிமுகவுடன் தான் பாஜக இன்னும் கூட்டணியில் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. திமுக - பாஜக இடையே தான் போட்டி என வி.பி. துரைசாமி கூறியது அவரது கருத்து. நிறைய பேர் பாஜகவில் இணைந்து வருவதால், வேகமாக பாஜகவின் நிர்வாகிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறது. நாங்களும் அதில் இருக்கிறோம். ஆனால் தேர்தல் நேரத்தில் இருக்கும் அரசியல் நிலைமைக்கு ஏற்ப இதில் மாற்றம் ஏற்படலாம். அந்த நேரத்தில் எங்கள் கட்சித் தலைமை உரிய முடிவை எடுக்கும்” எனக் கூறியுள்ளார்.
Loading More post
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!