மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் திடீர் மரணம். கொரோனா பரிசோதனை முடிவு வராததால் சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய ஏற்பாடு.
மயிலாடுதுறையை அடுத்துள்ள உளுத்துக்குப்பை கிராமத்தை சேர்ந்த 58 வயது பெண்மணிக்கு உடல்நிலை சரியில்லை என்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பொது வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதே போன்று மயிலாடுதுறை கீழபட்டமங்கலத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவிற்காக காத்திருந்திருந்தனர்.
இந்நிலையில், இன்று இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த இரண்டு இறப்புகளிலும் கொரோனா முடிவு வராமல் இருப்பதால் சுகாதாரத்துறையினர் உடனடியாக பொது வார்டுக்கு விரைந்து அவர்களது உடல் வைக்கப்பட்டிருந்த இடம் மற்றும் சிகிச்சை பெற்ற இடம் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
அவர்களது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இரண்டு தரப்பு உறவினர்களும் ஒத்துக்கொண்டு விட்டதால் சுகாதார அதிகாரிகள் 2 உடலையும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். காய்ச்சல் அறிகுறியுடன் வந் இரண்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் கொரோனா உயிரிழப்பாக இருக்குமோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்