வெளியானது கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ ஃபர்ஸ்ட் லுக் -நாளை டீஸர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாகேஷ் குக்குனூரின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும், ‘குட் லக் சகி’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கிறது. கீர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் மூன்று மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். மேலும் நாளை சுதந்திர தினத்தன்று டீஸர் வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.


Advertisement

இந்த படத்தில் ஜகபதி பாபு மற்றும் ஆதி பினிசெட்டி போன்ற தெலுங்கு நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். சுதந்திர தினத்தன்று காலை 10 மணியளவில் டீஸர் வெளியாகவுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதல்கட்ட படபிடிப்பு ஏப்ரல் 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படத்தின் முக்கிய பகுதிகளை விகராபாத் மற்றும் புனேவில் எடுத்துள்ளனர். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image


Advertisement

’மிஸ் இந்தியா’, ‘ரங் தே’, ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’, மோகன்லாலுடன் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ ஆகிய படங்களை அடுத்தடுத்து வரிசையாக வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement