[X] Close

தனியாக வாழ விருப்பம்.. - குடும்பத்தினருக்கு எலி மருந்து கொடுத்த இளைஞர்! தங்கை பலி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவின் காசார்கோடு மாவட்டத்த ஆன் மேரி (16) மற்றும் அவரது தந்தை பென்னி ஆகியோர் ஆகஸ்ட் 3ஆம் தேதி உடல்நலக்குறைவால் வெள்ளரிகுண்டு பகுதியில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் 2 நாட்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா உட்பட அனைத்து சோதனைகளும் செய்தபின், மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டது.


Advertisement

அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆன பின் சேருபுழாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ஆன் மேரியின் நிலை மோசமடைந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் மரணமடைந்தார். பிரேத பரிசோதனையில் அவர் மரணம் இயற்கைக்கு எதிரானது என்றும் உடலில் விஷம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த போலீஸார் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகுதான் ஆன் மேரியும், அவரது தந்தையும் பாதிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், பென்னியை கோழிக்கோட்டில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு அவருடைய கல்லீரல் 80 சதவீதம் சேதமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


Advertisement

ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகு, ஆன் மேரியின் தாயார் மற்றும் சகோதரர் ஆல்பின் இருவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் இருப்பதைப் பார்த்த போலீஸுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். ஆல்பினின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் அவரை விசாரித்துள்ளனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த

image

ஜூலை 30 அன்று ஐஸ்கிரீமை இரண்டு ஜாடிகளில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறார். முதல் ஜாடியில் இருந்த ஐஸ்க்ரீமை குடும்பமாக சேர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர். இரண்டாவது ஜாடியில் எலி மருந்தை கலந்து, அதை கொடுத்திருக்கிறார். ஆல்பின் அதை சாப்பிடவில்லை. அவரது தாயார் பெஸ்ஸி ஐஸ்க்ரீம் அதிகம் விரும்பாததால் இரண்டாவது முறை சாப்பிடவில்லை.


Advertisement

ஆனால் விஷம் கலந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்ட பென்னியும், ஆனும் அடுத்தடுத்த நாட்களில் உடல்நலக் குறைவுபட தொடங்கினர். ஆல்பின் ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சிக்கனில் எலி மருந்தை கலந்திருக்கிறார். ஆனால் மருந்தின் அளவு குறைவாக இருந்ததால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. எனவே ஜூலை 29ஆம் தேதி மீண்டும் விஷம் வாங்கி அதை ஐஸ்க்ரீமில் கலந்திருக்கிறார். எலி மருந்து தொடர்பாக இணையத்தில் தேடியதையும்  போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், ஆல்பின் தனியாக வாழ விரும்பியதால் தனது முழு குடும்பத்தையும் விஷம் வைத்துக் கொல்ல முயன்றதாகவும், அவர் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement