உடல் வலிகளை போக்க தெரிந்து கொள்ளுங்கள் எர்கோனாமிக்ஸ்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’’வீட்டில் கிச்சனில் நின்று வேலை செய்பவர்களுக்கும், கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்பவர்களுக்கும் அடிக்கடி தோள்ப்பட்டை, கை, கழுத்து மற்றும் மூட்டுவலி வருவது சகஜம்தான். ஆனால் இந்த வலி எதனால் வருகிறது அதற்கான காரணங்கள் என்னென்ன என்பது பலருக்கும் தெரியாது. உடலுக்கும் பொருட்களுக்கும் உள்ள தொடர்பை அறிவியலுடன் தொடர்புபடுத்தி பிரச்னைகளுக்கு தீர்வுகளை கண்டறிவதுதான் பணிச்சூழலியல் என்கிற ’’எர்கோனாமிக்ஸ்’’.


Advertisement

தெரிந்த பிரச்னைக்கு தெரியாத பெயரா ஆம், இது ஒரு கிரேக்க வார்த்தை. ‘எர்கோ’ என்றால் ’வேலை’, ‘னாமோஸ்’ என்றால் ‘விதிமுறைகள்’ என்று அர்த்தம். மேலும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களை சரியாக கையாளத் தெரிந்துகொள்வது அவசியம். 

பொருட்கள் மற்றும் வேலைக்குத் தகுந்தாற்போல் உடலை அமைக்காமல், உடலுக்குத் தகுந்தாற்போல் இருக்கும் இடத்தை மாற்றியமைக்கவேண்டும் என வலியுறுத்துவதுதான் எர்கோனாமிக்ஸ்’’ என்கிறார், ப்ரேம் சென்டர் டாக்டர்.எஸ். சுந்தர்.


Advertisement

பணியிடத்தில் கவனிக்க வேண்டியவை

ஓடியாடி வேலை செய்த காலம் போய், கம்ப்யூட்டரே கதி என்றுதான் இன்று நிறையபேர் இருக்கின்றனர். தொடர்ந்து 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது உடல் மற்றும் கால்களுக்கு அதிக வேலை இருப்பதில்லை. அசைக்காமலே கீழே தொங்கிக்கொண்டிருக்கும் கால்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து மரத்துப்போகிறது.

மேலும் கைவிரல்கள், தோள்ப்பட்டை, கழுத்து மற்றும் முதுகுப்பகுதிகளில் அழுத்தம் செலுத்தப்படும்போது அதிக வலி ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஆர்.எஸ்.ஐ என்று அழைக்கப்படும் ‘ரெபெடிட்டிவ் ஸ்ட்ரெய்ன் இன்ஜுரி’யும் ஏற்படுகிறது.


Advertisement

வலி தாங்கமுடியாமல் ஆர்தோ, பிஸியோ மற்றும் நியூரோ என பல மருத்துவர்களிடம் சென்றாலும் மீண்டும் அதே வேலையை செய்யும்போது பிரச்னைகளுக்கு தீர்வு என்பதே கிடைக்காது.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் ‘அட்ஜெஸ்டெபிள் சேர்’ வாங்கி அமரலாம். இதனால் ஒரே நிலையில் அமர்ந்துகொண்டிருக்காமல் சிறிது நேரத்திற்கு ஒருமுறை மாறி மாறி அமர்ந்துகொள்ள வசதியாக இருக்கும்.

மேலும் கம்ப்யூட்டர் கண்கள் அளவிற்கு நேராக இருக்கும்படி மேஜை மற்றும் நாற்காலியை அட்ஜஸ்ட் செய்து அமரவேண்டும்.

தொடர்ந்து பயன்படுத்தும் பொருட்களுக்கு ஐபேட் ஸ்டாண்ட், எக்ஸ்டர்னல் கீபோர்டு, மௌஸ் ஸ்டேண்ட் போன்ற சப்போர்ட் ஆக்ஸசரீஸ் வாங்கிப் பயன்படுத்தலாம். 

சிலருக்கு முதுகின் கீழ்ப்பகுதியில் அதிக வலி இருக்கும். ஒரு குட்டித் தலையணை வைத்து சப்போர்ட் கொடுக்கலாம்.

image

அதிக நேரம் கால்களை கீழேயே வைக்காமல் சிறிய ஸ்டூல் ஒன்றை வைத்து கால்களை சற்று உயரமாக வைக்கும்போது ரத்த ஓட்டம் சீராகும். 

உடலுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். மேலும் அதிக எடையுள்ளப் பொருட்களை சட்டெனத் தூக்கக்கூடாது.

வீட்டில் கவனிக்க வேண்டியவை

தினமும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் கைக்கு எட்டும் உயரத்தில்தான் வைக்கவேண்டும். 

கைப்பிடி இல்லாத பொருட்களைத் தூக்கும்போது விரலிலிருந்து முழங்கை வரைதான் எடையைத் தாங்க நேரிடும். எனவே கவனமாக கையாள வேண்டும். அளவுக்கு அதிகமான எடையைத் தூக்கும்போது தசை கிழியும் வாய்ப்புகள் அதிகம்.

துணி துவைக்கும்போது நீரில் ஊறிய துணி அதிக கனமாக இருக்கும். சட்டென குனிந்து தூக்கும்போது கை சுளுக்கிவிடும். 

பெண்கள் தொடர்ந்து அதிக நேரம் நின்று வேலைசெய்யும் இடம் கிச்சன்தான். பல வீடுகளில் அடுப்பு வைக்கும் மேடை சற்றுத் தாழ்வாகவோ அல்லது உயரமாகவோ இருக்கும். இதனால் அதிகநேரம் குனிந்தோ அல்லது கைகளை தூக்கியோ வேலை செய்யவேண்டி இருக்கும். எனவே அடுப்பு மேடையை சரியாக இடுப்பளவிற்கு அமைக்கவேண்டும்.

மேலும் கத்தி, பாத்திரங்கள் மற்றும் மளிகைச் சாமான் டப்பாக்களை பல வீடுகளில் உயரத்தில் அடுக்கி வைத்திருப்பார்கள். இதுபோன்ற அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் கைக்கு எட்டும் உயரத்தில் இருப்பது அவசியம். 

பல வீடுகளில் பித்தளை, வெண்கலம் போன்ற கனமான சாமான்களை லாஃப்ட்டில் வைத்திருப்பார்கள். அதைத் தவிர்த்து கீழேயே அடுக்கி வைக்கவேண்டும்.

பெண்கள் வாட்டர்கேன், கேஸ் சிலிண்டர் போன்றவற்றை தூக்குவதை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். இதுபோன்ற பொருட்களை எப்படிக் கையாளுவது என விதிமுறைகள் இருக்கிறது. அதை பின்பற்றாவிட்டால், முதுகுத்தண்டில் உள்ள ஜவ்வு கிழிந்துவிடும். 

image

சிறிய சிறிய ஸ்டூல்கள் இப்போது கிடைக்கின்றன. சிறிது உயரத்தில் இருந்தாலும் பொருட்களை எம்பி எம்பி எடுக்காமல் ஸ்டூலில் ஏறி எடுப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அரிசி, பருப்பு, கோதுமை போன்ற கனமானப் பொருட்களை பல வீடுகளில் டப்பாவில் போட்டு மேல் ஷெல்ஃப்பில் வைத்திருப்பார்கள். இதைத் தவிர்க்கவேண்டும்.

மேலும் உடலை வளைத்தோ அல்லது அடிக்கடி பின்புறம் திரும்பியோ பொருட்களை எடுப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

மேலும் வீடு கட்டும்போதே என்ஜீனியர்களின் ஆலோசனையுடன் எர்கோனாமிக்ஸ் விதிமுறைகளைக் கையாண்டு கிச்சன் மற்றும் பொருட்களை வைக்கும் இடங்களை வடிவமைப்பது நல்லது.loading...

Advertisement

Advertisement

Advertisement