[X] Close >

கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய செவிலியர் திடீர் மரணம்... ராமநாதபுரத்தில் சோகம்

The-death-of-the-nurse-who-was-treated-for-corona-infection-----Tragedy-in-Ramanathapuram----

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த காப்பீட்டு திட்ட பிரிவு செவிலியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இன்று உடல் நலகுறைவால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image
ராமநாதபுரம் பாண்டியூரில் மருந்தகம் வைத்திருக்கும் இளையராஜா என்பவரின் மனைவி கலைச்செல்வி (38). இவர் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்ட பிரிவில் தொகுப்பூதிய செவிலியராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் இவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ராமநாதபுரம் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அரசு மருத்துவ மனையிலிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பாண்டியூரில் உள்ள தனது வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.


Advertisement

இந்நிலையில் செவிலியர் கலைச்செல்வி இன்று இறந்து விட்டார். மருத்துவமனை செவிலியர் கொரோனா சிகிச்சைக்கு பின் உயிரிழந்துள்ளது. சுகாதாரத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர் கலைச்செல்வி அனைவரிடமும் எளிமையாக, மரியாதையுடனும் பழகியவர் எனவும் கூறப்படுகிறது. செவிலியர் கலைச்செல்வி குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் கிடைக்க மாவட்ட செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags : Ramanathapuram
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close