தேசியக்கொடியை அவமதித்து வீடியோ வெளியிட்ட புகாரில் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக முதலமைச்சர் மற்றும் தேசியக்கொடியை அவமதித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தேசியக் கொடியை அவமதித்தும் பேசி வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அதிமுக கொடி குறித்தும் அவர் சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி உட்பட அதிமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

image


Advertisement

இந்நிலையில் எஸ்.வி சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக, அவர்மீது 2 பிரிவுகளின் கீழ் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“எனது மனைவிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கிறார்” - போலீஸ் எஸ்.ஐ மீது நடிகர் பாலாஜி புகார்

loading...

Advertisement

Advertisement

Advertisement