ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் அண்மையில் டெல்லி சென்று பாஜக அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பினார். இதையடுத்து திமுக, அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ததோடு அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதிலளித்த கு.க.செல்வம், “தாங்கள் அனுப்பிய நோட்டீஸில் விவரங்கள் இல்லை. நான் என்ன பொய்யான தகவலை சொன்னேன். திமுக தொண்டர்கள் மற்ற கட்சித் தலைவர்களையோ, தொண்டர்களையோ சந்திக்க கூடாது என எங்கும் குறிப்பிடவில்லை.
கருணாநிதியை பாஜகவை சேர்ந்த மோடி நேரில் வந்து பார்த்தது அனைவருக்கு தெரியும். ஆகவே கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது. என் மீதான குற்றச்சாட்டு நோட்டீஸை திமுக திரும்ப பெற வேண்டும். சட்டப்படி விசாரணை வைத்து நான் அறிக்கையில் கேட்ட விவரங்களை அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கு.க.செல்வம் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கு.க.செல்வம் கழக கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகைய்ல் செயல்பட்ட்டு வந்தாலும் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலுருந்தும் நிரந்தமாக நீக்கம் செய்யப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!