[X] Close

துளசேந்திரபுரம் டூ அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்: கமலா ஹாரிஸால் நெகிழும் கிராமம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசின் பூர்வீக கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.image
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் -ஐ எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் (55) என்பவர் போட்டியிடுகிறார். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.


Advertisement

image
இவரது தாய்வழி தாத்தா கோபாலன் பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். ஸ்டெனோகிராஃபராக வாழ்க்கையை தொடங்கிய கோபாலன், ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீசஸ் பணியில் பணியாற்றியவர். 1930-ம் ஆண்டு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக இந்திய அரசு சார்பில் சாம்பியா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

image
இவருக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் சட்டப்படிப்பு பயின்றவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிஃபோர்னியாவில் அட்டார்னியாக இருந்த இவர் தற்போது கலிபோர்னியாவில் ஷெனட்டராகவும் பதவி வகிக்கிறார்.


Advertisement

இவர், கடந்த 2019-ம் ஆண்டில் எழுதிய புத்தகத்தில், தனது தாத்தா பி.வி.கோபாலன் குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஊக்க சக்தியாக தாத்தா திகழ்ந்ததாகவும் கடந்த 1991-ம் ஆண்டு சென்னையில் தனது தாத்தா கோபாலனுக்கு என்பதாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட போது சென்னை வந்திருந்ததாகவும் அங்கு அனைத்து குடும்பத்தினரும் கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

image
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போட்டியிடுகிறார் என்பதும், தங்கள் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட கோபாலன் என்பவரின் பேத்தி, இத்தகைய உயர்ந்த பதவிக்கு போட்டியிடுவது பற்றிய தகவல் அறிந்த துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதன் மூலம் பைங்காநாடு கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் 2014ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளதாக கோயிலை நிர்வகித்து வரும் ரமணன் தெரிவித்தார்.


Advertisement

image
துணை அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் குடும்பத்தார் சார்பில் குலதெய்வ கோயிலான தர்மசாஸ்தா கோயிலில் வழிபாடு நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement