புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை குறைந்தபட்சம் 1000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது “ நமது நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக ஜிப்மர் மருத்துவமனை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் இயக்குநர் அளித்த தகவலின்படி அங்கே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென 250 படுக்கைகள் கொண்ட வார்டு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜிப்மர் மருத்துவமனை விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறது. புதுச்சேரியில் இப்போது ஒவ்வொரு நாளும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகின்ற காரணத்தால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க முடியாமல் ஜிப்மர் மருத்துவமனை திணறி வருகிறது. எனவே உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை ஆயிரம் படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அங்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகள் செய்யும் விதமாக அதைத் தரம் உயர்த்தித் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” குறிப்பிட்டிருக்கிறார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்