“அப்பா விரைவில் குணமடைய அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்”- பிரணாப் முகர்ஜியின் மகன் கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரணாப் முகர்ஜி விரைவாக குணமடைய அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் என்று அவருடைய மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

திங்கட்கிழமை கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று டெல்லி ராணுவ மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்தது. இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி “ உங்கள் பிரார்த்தனையின் காரணமாக எனது தந்தையின் ரத்த ஓட்டம் இப்போது சீரடைந்துள்ளது. என் தந்தையின் உடல்நிலை விரைவாக குணமடைய தொடர்ந்து வேண்டிக்கொள்ளுங்கள்.நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement