மத்திய ஆயுஷ்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தினை கடந்துள்ளது. இதில் பல அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பலரும் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த செய்தியை ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்த அவர், தனக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றும், ஆனால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது அவர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ரீபாத் நாயக்.

loading...

Advertisement

Advertisement

Advertisement