ஆன்லைன் வசதியின்றி தவித்த பழங்குடியின மாணவர்கள்: சிறப்பு வகுப்புகள் தொடங்கியதால் மகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொள்ளாச்சி அருகே தொலைக்காட்சி மற்றும் செல்போன் வசதி இல்லாததால் கல்வி கற்க முடியாமல் இருந்த பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடக்கம். கல்வித்துறை நடவடிக்கையால் பழங்குடியின மாணவர்கள் மகிழ்ச்சி.


Advertisement

image

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி மற்றும் வனபகுதியை ஒட்டியுள்ள புளியகண்டி, நவமலை, சின்னாறு, சர்கார்பதி, கூமாட்டி, எருமை பாறை, உள்ளிட்ட 18 பழங்குடியினர் மக்கள் குடியிருப்புகள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.


Advertisement

கொரோனா நோய் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆழியார் மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலுள்ள பழங்குடியின மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பதில் சிக்கல் எழுந்தது. மின்சார வசதி, செல்போன் வசதி மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லாத பழங்குடியின மாணவர்கள் கல்விகற்க முடியாமல் தவித்து வந்தனர்.

image
இதனால் அரசு பழங்குடியின மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பாடம் நடத்த வேண்டும் என்று பழங்குடியினர் மக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று ஆழியார் அருகே உள்ள புளியங்கண்டி அரசு தொடக்கப்பள்ளியில் முதல் கட்டமாக, தலைமை ஆசிரியர் சித்ரா தலைமையில், 6 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, ஆழியார் புளியங்கண்டியை சேர்ந்த பழங்குடியின மாணவர்களுக்கு, வகுப்பு அறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து தினந்தோறும் ஒவ்வொரு பாடம் அடிப்படையில் 2 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது.


Advertisement

நான்கு மாதங்களாக கல்விகற்க முடியாமல் இருந்த மாணவர்களை பெற்றோர்களே பள்ளிக்கு அழைத்து வந்து விட்டனர், பழங்குடியினர் மாணவர்கள் கல்விகற்க சிறப்பு வகுப்பை ஏற்படுத்திக் கொடுத்த கல்வித்துறை நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். புளியகண்டி மட்டும் இல்லாமல் மீதமுள்ள பழங்குடியினர் கிராமங்களில் வசிக்கும் மாணவளுக்கும் சிறப்பு வகுப்பு தொடங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement