[X] Close >

"கடவுள் எங்களுக்கு பரீட்சை வைத்திருக்கிறார்" சஞ்சய் தத் மனைவி உருக்கம் !

God-has-yet-again-chosen-to-test-us-Sanjay-Dutt-wife-on-his-cancer-diagnosis

கடவுள் தங்களுக்கு இப்போது பரீட்சை வைத்திருக்கிறார் அதிலிருந்து மீள்வோம் என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மனைவி மான்யடா தத் கூறியுள்ளார்.


Advertisement

சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக சினிமா ஊடகவியலாளர் கோமல் நத்தா தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். முன்னதாக, நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், 'ஹாய் நண்பர்களே, நான் சில மருத்துவ சிகிச்சைக்காக பணியில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறேன்."

image


Advertisement

மேலும் "எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். எனது நலம் விரும்பிகள் கவலைப்படவோ தேவையில்லாமல் சிந்திக்கவோ வேண்டாம். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன், நான் விரைவில் நலமுடன் திரும்புவேன்' என அந்த பதிவில் கூறியிருந்தார். இதனையடுத்து பாலிவுட் பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் அவர் நலம் பெற வேண்டும் என்று ட்வீட் செய்தனர்.

image

இப்போது சஞ்சய் தத்தின் மனைவி மான்யடா தத் உருக்கமான கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் அதில் "இந்தக் கடினமான காலக்கட்டத்தை கடக்க எங்களுக்கு நம்பிக்கையும் பிரார்த்தனைகளும் தேவைப்படுகிறது. கடவுள் எங்களுக்கு மற்றொரு பரீட்சை வைத்துள்ளார். இதிலிருந்து நாங்கள் மீள்வோம், இந்த சவாலை எதிர்கொண்டு மீண்டு வருவோம்" என தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close