“தமிழுக்கு பிரச்னை என்றால் ப.சிதம்பரம் ஒலிக்காமல் இருந்ததில்லை” - கார்த்தி சிதம்பரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழுக்கும் தமிழினத்திற்கும் பிரச்னை என்றால் ப.சிதம்பரம் ஒலிக்காமல் இருந்ததில்லை என அவரது மகனும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “ஹிந்தியில் டூவிட் போடும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பலாமா? இது ஒரு விதண்டாவாதம். பிரச்சனை மொழி பற்றியதில்லை. "ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர்" என்ற எண்ணத்தை பற்றியது. தமிழுக்கும் தமிழினத்திற்கும் பிரச்னை என்றால் ப.சிதம்பரம் ஒலிக்காமல் இருந்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

முன்னதாக விமான நிலையத்தில் தன்னிடம் பேசிய மத்திய தொழிற் பாதுகாப்பு படை காவலரிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்டி கேட்டதாகவும் நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியதாகவும் கனிமொழி தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ப.சிதம்பரம் தானும் இதுப்போன்ற கேலிகளை அனுபவித்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement