ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா!

Rajasthan-Royals-fielding-coach-Dishant-Yagnik-tests-positive-for-Corona

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020-க்கான ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பி.சி.சி.ஐ நேற்று முன்தினம் ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களுக்கு 53 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தொடரின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கியுள்ளது.

image


Advertisement

விளையாட்டு வீரர்கள், வீரர்களின் குடும்பத்தினர், ஊழியர்கள், உரிமையாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என அனைவரும் அவசியம் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பின்னர் அதன் முடிவுகளை பொறுத்தே தொடரில் பங்கேற்க முடியும் என தெரிவித்துள்ளது பி.சி.சி.ஐ.

ஐ.பி.எல் அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணி வீரர்களை தனிமைப்படுத்தவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளன. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணி தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடுத்த வாரம் மும்பையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளனர். இதனால் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள். இதில் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்குக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.


Advertisement

image

தற்போது சிகிச்சையில் உள்ள அவர் இருவாரங்களுக்கு பிறகு மீண்டும் இரு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். அதில் நெகட்டிவ் என்றால் அவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல அனுமதிக்கப்படுவார். அங்கு சென்ற பிறகும் 3 சோதனைகள் உள்ளன. மூன்றிலும் நெகட்டிவ் என்றால் தான் அவர் பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement