[X] Close

தூத்துக்குடியில் கொரோனாவிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய 38 காவலர்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 38 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


Advertisement

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

image


Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள், எஸ்.ஐ.க்கள், பெண் காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் என மொத்தம் 38 காவலர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

38 காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி, '‘கொரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள். அப்பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதனின்று மீண்டு வந்துள்ளீர்கள்.

image


Advertisement

சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது” என்று வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement