உலக இளைஞர்கள் தினம் இன்று!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆகஸ்டு 12-ஆம் தேதி உலக இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் தினமாக இதனை உலகநாடுகள் கொண்டாடுகின்றன.


Advertisement

image

1999-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்டு 12-ஆம் தேதியை உலக இளைஞர் தினமாக கொண்டாட அறிவித்தது. இந்த நாளில் உலகம் முழுவதுமுள்ள இளைஞர்களுக்கு உள்ள பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளும் இந்த நாள் மூலமாக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், சிறப்பான எதிர்காலத்தை திட்டமிடுதல் மற்றும் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்கின்றனர்.


Advertisement

image

ஐ.நா., அறிக்கையின்படி, 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை இளைஞர்களுக்கு ஒவ்வொரு அரசும் சரியான விதத்தில் ஏற்படுத்தி தரவேண்டும். குடும்பத்தை முன்னேற்ற வேண்டியது, இவர்கள் கையில் உள்ளது. எனவே இளைஞர்கள், பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனாலும் சிலர், இளமைப் பருவத்தில் ஆல்கஹால், புகையிலை, போதைப் பொருள் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். மாறாக திறமைகளை வளர்த்துக்கொண்டு  நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ இந்நாளில் இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement