தங்கமும் வைரமும்... உலகின் விலையுயர்ந்த மாஸ்க் இது தான்..! விலை என்ன தெரியுமா?

The-most-expensive-mask-in-the-world-made-of-gold-and-diamonds-in-Israel

உலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிய வேண்டியுள்ளது.


Advertisement

image

மறுபக்கம் கொரோனாவின் தாக்கத்தால் தங்கத்தின் விலை விண்ணை முட்டி வரும் நிலையில் உலகிலேயே விலை உயர்ந்த மாஸ்க்கை அணிய வேண்டுமென்ற விசித்திர ஆசை அமெரிக்காவில் வசித்து வரும் சீன நாட்டை சேர்ந்த கோடீஸ்வரருக்கு வந்துள்ளது.


Advertisement

அதன் விளைவாக தங்கத்தினாலான வைர கற்கள் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த மாஸ்க் ஒன்றை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பு நிறுவனம் எவல்.

image

“18 காரட் வெள்ளை தங்கத்தில் தயாராகி வரும் இந்த மாஸ்க்கில் 3600 வெள்ளை மற்றும் கருப்பு நிற வைர கற்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதில் N99 ஃபில்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதனை வடிவமைக்க எங்களுக்கு கிடைத்த வாய்ப்பினால் இந்த கடினமான நேரத்தில் எங்கள் நிறுவனத்தை நம்பியுள்ள ஊழியர்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். வரும் டிசம்பர் 31க்குள் இதை டெலிவரி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார் எவல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசக் லெவி. 


Advertisement

சுமார் பதினோரு கோடி ரூபாய் செலவில் இந்த மாஸ்க் தயாராகி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement