ராணா திருமணம்: ’அமுல்’ நிறுவனத்தின் வித்தியாச வாழ்த்து!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’பாகுபலி’ புகழ் நடிகர் ராணா திருமணத்திற்கு குவிந்த பிரபலங்களின் வாழ்த்துகளுக்கு மத்தியில் இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ’அமுல்’ நிறுவனத்தின் வாழ்த்து எல்லோரையும் ஈர்த்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தெலுங்கு முன்னணி நடிகர் ராணாவுக்கும் அவரது காதலி மீகிகா பஜாஜிற்கும் திருமணம் நடைபெற்றது.


Advertisement

image

இத்திருமணத்தில் ராணாவின் நெருங்கிய தோழி சமந்தா, ராம் சரண், வெங்கடேஷ், நாக சைதன்யா, அல்லு அர்ஜுன் என குறிப்பிட்ட தெலுங்கு நடிகர்கள் மட்டுமே  கலந்துகொண்டார்கள். கொரோனா சூழலால் பெரும்பாலான பிரபலங்களும் நடிகர்களும் கலந்துகொள்ள முடியாததால் சமூக ஊடகங்களின்,  வாயிலாக எல்லோரும் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்கள்.


Advertisement

 

image

 


Advertisement

அப்படி பகிந்துகொண்ட வாழ்த்தில் அமுல் நிறுவனத்தின் வாழ்த்தும் ஒன்று. ஆனால், பிரபலங்களின் வாழ்த்துகளைவிட வித்தியாசப்படுத்தி நெகிழவைத்துவிட்டது அமுல்.

 

 

image

அந்த வாழ்த்துக் கார்ட்டூனில் அழகிய அமுல் பேபி சிகப்பு நிற புடவை அணிந்து ராணா டகுபதிக்கு ரொட்டியும் வெண்ணையும் கொடுக்கிறது. அதனை, எடுத்து ராணாவும் அவரது மனைவி மீகிகா பஜாஜும் ஒருவருக்கொருவர் ஊட்டி அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.  ராணா டகுபதி என்பதை ’டகுபட்டர்லி”என்று வாழ்த்தியது இந்த வாழ்த்தில் உற்சாகமான ராணா டகுபதி அமுலுக்கு நன்றி தெரிவித்து ஹார்ட்டின்களை தெறிக்கவிட்டிருக்கிறார்

loading...

Advertisement

Advertisement

Advertisement