12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 74 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


Advertisement

திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் சேரன் தெருவை சேர்ந்தவர்கள் மாது-ஹேமலதா தம்பதியினர். இவர்கள் இருவரும் அதேப்பகுதியில் சூப் கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 12 வயதில் மகள் உள்ளார். அவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

image


Advertisement

இந்நிலையில், சிந்தாமணி பூசாரி கல்லறை தெருவை சேர்ந்த ஜெயராமன் என்பவர் 12 வயது சிறுமியிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த சிறுமி அழுது கொண்டே வந்து வீட்டில் தனது அம்மாவிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹேமலதா பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement