கேரள விமான விபத்து: “ மலப்புரம் மக்களுக்கு எனது சல்யூட்” - நடிகர் சூர்யா ட்வீட்

My-deep-condolences-to-the-grieving-families--Prayers-for-speedy-recovery-of-the-injured-Salutes-to-the-people-of-Malappuram---Respects-to-the-pilots---surya

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். 


Advertisement

அண்மையில் நடந்த கோழிக்கோடு விமான விபத்தில் விமானிகள் தீபக் வசந்த் சாத்தே, மற்றும் அகிலேஷ் குமார் ஆகியோர் உட்பட 18 நபர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பல திரைப்பிரபலங்கள் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  இரங்கல் தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டதாவது “ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். படுகாயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  விபத்து நடந்தபோது உதவி புரிய வந்த மலப்புரம் மக்களுக்கும், உயிரிழந்த விமானிகளுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”  என்று பதிவிட்டுள்ளார். 

 

 


Advertisement

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement