சிங்கப்பூரின் தந்தை என வர்ணிக்கப்படும் சிங்கப்பூர் நாட்டின் நிறுவனர் லீ குவான் யூவின் பேரனும் தற்போதைய பிரதமரின் மருமகனுமான லீ ஷெங்வ், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தனது ஃபேஸ்புக்கில் சிங்கப்பூர் அரசாங்கம் குறித்து, ’உடனே வழக்காடுகின்ற மிகவும் திறமையான நீதிமன்ற அமைப்பு’ என்று லீ ஷெவ்ங் கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார். இவர் அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இதற்கு தண்டனையாக 15 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்(11 ஆயிரம் அமெரிக்க டாலர்) அபராதமாக செலுத்தவேண்டும் அல்லது ஒரு வாரம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்பேரில், சிறிது அமைதியையும், நிம்மதியையும் பெறுவதற்காக அபராதத்தை செலுத்துவதாகவும், தன்னையும் தன் குடும்பத்தையும் அரசாங்கம் தாக்குவதை தவிர்க்கவும் அபராதத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் குற்றம் செய்ததாக ஒத்துக்கொள்ளவில்லை.
'எனது நண்பர்கள் மட்டுமே பார்க்கும்படி வைத்திருந்த என்னுடைய ஃபேஸ்புக் பதிவு நீதித்துறையை அவதூறு செய்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் ஒருவரின் தனியுரிமை மற்றும் கருத்துரிமையை அடக்குவதே உண்மையான் ஊழல்’ என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய வார்த்தைகள் சட்டவிரோதமானது இல்லை என்றும், வளர்ந்த நாடுகள் தனிப்பட்ட கருத்துகளுக்காக குடிமக்களுக்கு அபராதம் விதிக்கவோ, சிறைதண்டனை கொடுக்கவோ கூடாது என்றும் கூறியுள்ளார்.
2015-இல் லீ குடும்பத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து குடும்ப சண்டை பயங்கரமானதால் அவர் அந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டார். லீயின் தந்தை கடந்த மாதம் சிங்கப்பூர் தேர்தலுக்கு முன்னர் ஒரு எதிர்க்கட்சியில் சேர்ந்தார். அவர் அங்கு போட்டியிடவில்லை என்றாலும் அதன் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ததன் விளைவு என்று கருதப்படுகிறது.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!