டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரிமியத் தொகை செலுத்த கால அவகாசத்தை அரசு நீட்டித்து தரவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ காவிரியில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இயற்கையின் ஒத்துழைப்பாலும், அரசின் முன்னேற்பாட்டாலும் தண்ணீர் வழிதடங்கள் தூர் வாரப்பட்டு குறித்து நேரத்தில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணி சென்று குறுவை சாகுடியை உடனடியாக துவங்க முடிந்தது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் வந்தது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா காலக் கட்டத்திலும் விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட 3 லட்சம் ஏக்கரைத் தாண்டி 1 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக, புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் நிகழ்ந்தால் விவசாயிகளை பாதுகாக்க, பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பீரிமியம் தொகை கட்டுவதற்கு கடந்த மாதம் 31-ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொடக்கவேளான்மை கூட்டுறவு சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினாலும், கணினியின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் கூட்டுறவு சங்கங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் பிரிமிய தொகையை விவசாயிகளால் செலுத்த முடியாமல் போனது,தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் குறுவை சாகுபடி, காப்பீடுத் திட்டத்தில் இணைய முடியாமல் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவரை 1.63 இலட்சம் ஏக்கருக்குதான் பயிர் காப்பீடு தொகை செலுத்தி உள்ளனர். மீதம் 1.50 இலட்சம் ஏக்கருக்குமேல் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை. ஆகவே காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தும் தேதியை இன்னும் 15-நாட்கள் நீடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் தொடர்ந்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது பயிர் காப்பீடு செய்ய முடியாதவர்கள் எதிர்பாராத விதமாக இயற்கையின் சீற்றத்தால் இழப்பு ஏற்படுமானால், விவசாயிகள் இழப்பீடு பெறமுடியாமல் மிகுந்ததுயரத்துக்குள்ளாவார்கள். ஆகவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயீர்காப்பீடு தொகை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும், 20019-2020 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பு தொகையை உடனடியாக வழங்கும்படியும் தமிழக அரசை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்,
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்