[X] Close

பயன்படுத்திய முகக் கவசம், பிபிஇ ஆடைகளை ரோட்டில் வீசிய மருத்துவமனை: 50 ஆயிரம் அபராதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் சாலை ஓரத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு, மதுரை மாநாகராட்சி 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து  நடவடிக்கை எடுத்துள்ளது.


Advertisement

image


மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனை ஒன்று மருத்துவக் கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டியதாகத் தெரிகிறது. இதனைக் கேள்விப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது சாலையோரத்தில் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள், கொரோனா கவச உடைகள் உள்ளிட்டவை கிடந்தன.


Advertisement

image

இதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு நோய் பரப்பும் வகையில் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு சுகாதார துறை அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement