பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான லியோனல் மெஸ்ஸி கொரோனாத் தொற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நானோ தொழிட்நுட்பம் புகுத்தப்பட்ட மெத்தையில் தூங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
33 வயது நிரம்பிய பார்சிலோனா கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியும் அவரது குடும்பமும் கொரோனாத் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நானோ தொழிட் நுட்பம் புகுத்தப்பட்ட மெத்தையில் தூங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த மெத்தையை கால்பந்து வீரர் சவுல் நிகுவேஸு தூதராக இருக்கும் நிறுவனம் தயாரித்துள்ளதாகவும், இந்த நிறுவனம் அர்ஜென்டீனா வீரர்களுக்கான பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
900 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 88,000 ரூபாய் மதிப்புடைய இந்த மெத்தையில் “விருக்ளின்” என்ற தொழிட்பம் புகுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொழிட்நுட்பத்தில் புகுத்தப்பட்டுள்ள நானோ துகள்கள் மெத்தையில் படுக்கும் ஒருவரின் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை 4 மணி நேரத்தில் நீக்கி விடுவதாகவும் சொல்லப்படுகிறது. இது மட்டுமல்ல மாடல்களுக்கு தகுந்த வாறு இதில் கால் மசாஜ் செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளதாம்.
6 முறை பாலன் டி'ஓர் விருதைப் பெற்றுள்ள லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டீனா நாட்டு கொரோனா நிவாரண நிதிக்காக 440,000 டாலர் கொடுத்திருப்பதும், சம்பளக் குறைப்பு நடவடிக்கைக்கு ஒத்திசைவு கொள்வதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அரசின் பொறுப்பை நீதிமன்றம் சொல்லும் நிலைமை பெருமைக்குரியதா? : கமல்ஹாசன்
மேற்குவங்கத்தில் பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ