பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிகரமாக மூளையில் அறுவை சிகிச்சை- வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து, வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது.


Advertisement

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தத் தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. வெற்றிகரமாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவரது மூளையில் இருந்த சிறிய கட்டி ஒன்று அகற்றப்பட்டுள்ளது. தற்போது சுவாசத்திற்காக அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement