புதுக்கோட்டை அருகே சூப்பர் மார்க்கெட் நிறுவனம் நடத்தி எம்எல்எம் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி வருவதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தில் பெற்ற மளிகை பொருட்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்ததால் பரபரப்பு.
புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள மேட்டுப்பட்டியில் வானவில் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் எம்எல்எம் என்ற பெயரில் பொதுமக்களிடம் விளம்பரம் செய்தது. அதன்படி, ஒருவர் 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து உறுப்பினராக சேர்ந்தால் அவர்களுக்கு 12 ஆயிரம் மதிப்புடைய 60 வகையான மளிகை பொருட்கள் கொடுக்கப்படும்.
அதே போல் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்கள் என பலரையும் இந்த நிறுவனத்தில் தலா 12 ஆயிரம் கொடுத்து உறுப்பினராக சேர்த்துவிட்டால், அதன் மூலம் உறுப்பினரை சேர்த்துவிடும் நபர்களுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் கூறினர். இதனை நம்பி தஞ்சாவூர் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுப்பதாக கூறிவிட்டு மூவாயிரம் மதிப்புள்ள பொருட்களையே வழங்கியதாகவும் மேலும் அவர்கள் கொடுத்த பொருட்கள் காலாவதி ஆனதாக உள்ளதாகவும், சில பொருட்கள் வெளியே விற்கும் விலையைவிட அதிக விலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இப்படியாக அந்த நிறுவனம் தங்களை ஏமாற்றி வருவதாகவும் இது குறித்து அந்த நிறுவனத்திடம் கேட்டால் முறையாக பதில் கூறாமல் மிரட்டி வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அந்த நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கூடி. அந்த நிறுவனத்தில் பெற்ற மளிகை பொருட்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியை சந்தித்து மனு கொடுத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி