கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் எடியூரப்பா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஒரு வாரம் கடந்த நிலையில், 77 வயதான எடியூரப்பா கொரோனாவில் இருந்து மீண்டு பூரண குணமடைந்துள்ளார்.


Advertisement

தற்போது நலமடைந்துள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வாழ்த்துகள் கூறியவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். "உங்கள் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவமனையில் சுய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளேன். உங்களுடைய ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றியுடையவனாக இருப்பேன். விரைவில் இயல்பு பணிகளுக்குத் திரும்புவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

image


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement